சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் பூமியில் விழுவது உறுதி

345 0

சீனாவினால் விண்ணிற்கு அனுப்பப்பட்ட விண்வெளி ஆய்வு மையமானது, பூமியில் விழுவது உறுதி செய்யப்பட்டுள்ள போதும், அது விழும் காலம் மற்றும் இடத்தை இன்னும் தீர்மானிக்கமுடியாதிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தியாங்கொங் 1 என்ற குறித்த விண்வெளி ஆய்வு மையம், கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவினால் விண்ணில் செலுத்தப்பட்டது.

எனினும் தற்போது அதன் கட்டுப்பாட்டை சீனா இழந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த விண்வெளி ஆய்வு மையம் எதிர்வரும் 3 மாதக் காலப்பகுதிக்குள் பூமியில் ஏதேனும் ஒரு பகுதியில் விழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8.5 டன் எடைகொண்ட இந்த விண்வெளி ஆய்வு மையமானது, பூமியின் வளிப்பரப்பில் உராய்வுக்கு உள்ளாகி தீப்பற்றி வெடிக்கும்.

எனினும் இவ்வாறு வெடிப்பதன் ஊடாக சிதறுகின்ற துண்டங்கள் குறைந்தது 100 கிலோ எடைகொண்டதாக இருக்கும் என்பதால், அவை விழுகின்ற இடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு உயிராபத்தும் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a comment