போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயன்ற அச்சுவேலிப் பெண் கைது

254 0

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மனி செல்ல முயற்சித்த அச்சுவேலிப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பலமுறை வெளிநாடு செல்ல முயற்சித்ததாகச் சொல்லப்படும் இந்தப் பெண், கட்டுநாயக்கவில் இருந்து போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மனி செல்லும் பயணத்தைத் துவங்கினார்.

எனினும், கட்டார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை, கட்டார் சுங்கத்துறையினர் இலங்கைக்கு நாடு கடத்தினர்.இலங்கை வந்திறங்கிய அந்தப் பெண் பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையின்போது பதிலளித்த அந்தப் பெண், பின்னர் தான் வாய்பேச முடியாதவராக நடித்துள்ளார்.எனினும், மருத்துவ பரிசோதனைகளையடுத்து அவர் வாய்பேச முடியாதவரல்லர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.அவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

Leave a comment