பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானிய வெளியுறவுச் செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு பாகிஸ்தானில் மிக மகத்தான நன்மதிப்பு காணப்படுவதாகவும் அதனூடாக இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியும் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தினை இதன் போது ஜனாதிபதியிடம் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.