யாழில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

302 0

யாழ்ப்பாணத்தில் இன்றும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று முதல் இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்துக்காக இராணுவம், காவற்துறை மற்றும் அரச அதிகாரிகள் இணைந்த 25 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் யாழ்ப்பாணத்தின் பொதுசுகாதார பரிசோதகர்களின் எல்லைகளின் ஊடாக, வீடுகளுக்கு விஜயம் செய்து, டெங்கு நுளம்பு பரவல் குறித்த சோதனைகளை நடத்துகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடத்தப்படுகிறது.

Leave a comment