முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 682 ஆவது படைப்பிரினினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீள கையளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய மக்கள் பிரதேசசெயலகத்தின் கதவினை அடைத்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்
இந்த மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கடந்த மாசிமாதம் தொடர் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்த காணிகளை மூன்று கட்டங்களாக விடுவிப்பதாக படைத்தரப்பு அறிவித்திருந்தது
ஏழுமாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை எனதெரிவித்து காணி உரிமையாளர்கள் இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கதவினை அடைத்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
இன்நிலையில் மக்கள் போராட்ட இடத்திற்கு வருகைதந்த பிரதேச செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவமோகன் ஆகியோர் மக்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்கள்.
இன்னிலையில் 682 ஆவது படைத் தளபதி பிரதேச செயலருடன் பேச்சுக்கள் நடத்த பிரதேச செயலகம் சென்றபோது மக்கள் மறித்து நின்றுள்ளார்கள் வாகனத்தை கொண்டு செல்ல அனுமதிக்காததால் இரங்கி பிரதேச செயலகம் செல்ல முடியாது என தெரிவித்து வாகனத்தை பிரதேச செயலகத்துக்கு எடுத்து செல்ல கோரியபோது மக்கள் காரணத்தால் படைத்தளபதி திரும்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் மக்கள் வீதியை மறித்து போராட முற்பட்டு சிறிது நேரம் பதட்ட நிலைமை தோன்றியது
இன்னிலையினை தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலீஸ் அதிகாரி பாராளுமன்றஉறுப்பினர் சிவனேசன் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளை பிரதேசசெயலகத்திற்குள் அழைத்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்கள் இதன்போது காணிஉரிமையாளர்கள் தங்கள் கோரிக்கையினை பிரதேச செயலாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொடுத்துள்ளார்கள்.
இன்னிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இதுதொடர்பில் எடுத்துரைக்கப்படவுள்ளதாகவும் அதன்பின்னர் மக்கள் தமது முடிவினை தெரிவிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார் இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் சென்றுள்ளனர் இன்றும் மக்கள் போராட்டத்தை இராணுவம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததையும் மக்கள் விசனம் தெரிவித்தனர் .