ரக்கா நகரத்தை மீண்டும் கைப்பற்றியது அரச படைகள்

1031 0

ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிரியாவின் ரக்கா நகரம், மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் சிரிய கூட்டு படைகள் அறிவித்துள்ளனர்.

ரக்கா நகரானது, ஜ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய தளமாக இருந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மற்றும் சிரிய கூட்டு படைகள் அந்த நகரை கைப்பற்றியுள்ள போதிலும் அங்கு ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலர் ஒளித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில் அவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் சிரிய கூட்டு படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment