ஏமன்: தீவிரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் – 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி

279 0

ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது.

அங்கு ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இரு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அல்-பேதா மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பினர் முகாம்கள் அமைத்துள்ளனர். அங்கு புதிதாக தீவிரவாத அமைப்பில் இணைபவர்களுக்கு ஆயுதங்கள் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு முகாம்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment