கட்டலோனிய சுதந்திர இயக்கத்தின்  உறுப்பினர்கள் கைது

331 0

ஸ்பெயின் – கட்டலோனிய சுதந்திர இயக்கத்தின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கட்டலோனிய தேசிய சபையின் தலைவரான ஜோர்டி சன்ஷெஸ் மற்றும் ஒமினம் கலாசார அமைப்பின் தலைவரான ஜோர்டி குய்சார்ட் ஆகியோரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும், ஸ்பெயினில் இருந்து கட்டலோனியா தன்னாட்சி பிராந்தியம் தனித்துச் செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை முன்னின்று நடத்தியவர்களாவர்.

இந்த வாக்கெடுப்பை ஸ்பானிய நீதிமன்றம் தடை செய்துள்ளது.

எவ்வாறாயினும், கட்டலோனியாவை தனிநாடாக அறிவிக்கும் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள அந்த பிராந்தியத்தின் தலைவர், அதனை நடைமுறைப்படுத்தாமல், ஸ்பெயினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் வழங்கினார்.

எனினும் கட்டலோனியா தனிநாட்டு அறிவிப்பை விடுத்துள்ளதா? என்பதை தெளிவுப்படுத்த அவருக்கு ஸ்பெயின் அரசாங்கம் ஒருவார காலம் அவகாசம் வழங்கிய நிலையில், அந்த அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.

ஆனால் அவர் இது குறித்த தெளிவுப்படுத்தலை மேற்கொள்ள மாட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் இந்த வாரம் கட்டலோனிய பிராந்தியத்தை ஸ்பெயின் அரசாங்கம் நேரடியாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment