ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு மீண்டும் கட்சியுடன் இணையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்தாநந்த அலுத் கமமே, குமார் வெல்கம போன்றோரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் விரும்பினால் மீண்டும் இணைந்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.