தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் மத்திய மாகாணத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டு வௌ;வேறு தினங்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதன்படி மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இன்றையதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண தமிழ் கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை பாடசாலை மேலதிக தினமாக நடாத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதி ஊவா மாகாணத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.