பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா இன்றையதினம் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான இருதரப்பு அரசியல் கலந்துரையாடலின் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக இன்றும் நாளையும் அவர் இலங்கையில் தங்கி இருப்பார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.