நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவில் வெளியில்
தீயுடன் சங்கமமான தியாகிகள் குமரப்பா புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும் , இந்திய வல்லாதிக்க இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின்போது முதற் பெண் போராளியான
இரண்டாம் லெப் மலதியினதும் , 30ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும்.
மன்னர் மாவட்டம் அடம்பன் பகுதியில் இலங்கை இரணுவத்தினுடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரகாவியமான லெப் கேணல் விக்டர் அவர்களின் 31ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நெதர்லாந்தில் உள்ள அல்மேரே நகரில் 15-10-2017 நேற்றைய தினம் நினைவுகூரப்பட்டது . இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் , தேசியக் கொடி ,ஈகச்சுடர் , யேற்றல்.
மலர்வணக்கம் அமைதிவனக்கதுடன் ஆரம்பமான நிகழ்வைததொடர்ந்து , தமிழீழ விடுதலைகாய் தம் இன்னுயிரை ஈகம் இந்த மானமறவர்களின் வரலாற்றை சித்தரிக்குமுகமாக மாணவர்களின் கவிதைகளும் விடுதலைகானங்களும் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.