அடுத்த வருடம் மகிழ்ச்சியான சூழலில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் – சம்பந்தன்!

263 0

இவ்­வ­ருட தீபா­வளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபா­வளி பண்­டிகை மிகவும் சிறப்­பான சூழலில், மகிழ்ச்­சி­யுடன் கூடிய வகையில் நடை­பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ஆம் நாள் அலரி மாளிகையில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகை வாழ்த்துச் செய்தியில், 2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்த தீபாவளித் திருநாளுக்கு முன்னர் இந்த வெளிச்சம் நிரந்தரமாக அமையும் எனத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், நல்லாட்சி அரசாங்கமானது, இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்தும் புதிய பய­ணத்தை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஆரம்­பித்­துள்­ளனர். இது புனித பய­ண­மாகும். இந்த பய­ணத்தில் அவர்கள் இரு­வரும் வெற்றி காண வேண்டும். அதற்­காக நாம் நூறு வீதம் ஆத­ரவு வழங்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிள­வு­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத ஒரு­மித்த நாட்­டுக்குள் அனைத்து இனத்­த­வர்­களும் சம­உ­ரி­மை­யுடன் வாழும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தேசிய தீபா­வளி விழா நேற்று அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இந்த தீபா­வளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபா­வளி பண்­டிகை மிகவும் சிறப்­பான சூழலில் மகிழ்ச்­சி­யுடன் கூடிய சூழலில் நடை­பெறும். அவ்­வாறு நடை­பெறும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே இந்த நிகழ்வில் கலந்து கொள்­கின்றோம்.

இதனை நான் ஏன் கூறு­கின்றேன் என்றால் நீண்­ட­கா­ல­மாக எமது நாடு இருளில் இருந்­தது. 2015 ஆம் ஆண்டு தை மாதம் 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பிறகு இந்த நாடு இருளில் இருந்து வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது. தற்­போது புதிய பய­ணத்தை இந்த நாடு ஆரம்­பித்­துள்­ளது. எல்­லோரும் ஒற்­று­மை­யாக, சமத்­து­வ­மாக வாழும் சூழலை உரு­வாக்­கு­வதே அந்த பய­ண­மாகும்.

இந்த நாட்டில் அவ்­வா­றான பய­ணத்தை வழி­ந­டத்­து­வ­தற்­காக ஜன­நா­யக அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்­கவும் இங்கே அமர்ந்­துள்­ளனர். அவர்கள் வெவ்­வேறு கட்­சி­களை சார்ந்­த­வர்கள். நீண்ட காலம் அவர்கள் ஒற்­று­மை­ப­டாமல் ஒரு­வரை ஒருவர் எதிர்த்து அர­சியல் செய்து வாழ்ந்­த­வர்கள். ஆனால் இன்று ஒன்­றாக இணைந்து இந்த நாட்டை புதிய பாதைக்கு இட்டு செல்­வ­தற்­காக ஒற்­று­மை­யாக இணைந்து செயற்­ப­டு­கின்­றனர்.

அவர்­க­ளுக்கு என்­னு­டைய வாழ்த்­து­களை தெரி­விக்­கின்றேன். அவர்கள் இரு­வரும் இந்த பய­ணத்தில் வெற்­றி­ய­டைய வேண்டும். எமக்­காக மாத்­தி­ர­மல்ல. இந்த நாட்­டிற்­கா­கவும் அனைத்து மக்­க­ளுக்­கா­கவும் வெற்­றி­வாகை சூட­வேண்டும். அந்த பய­ணத்தில் வெற்றி காணும் முக­மாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அந்த முயற்­சி­யிலும் நாம் வெற்­றி­காண வேண்டும்.

ஒரு­மித்த நாட்­டுக்குள் பிள­வு­ப­டாத, பிரிக்­கப்­பட முடி­யாத நாட்­டுக்குள் அனைத்து இனத்­த­வர்­களும் சமத்­து­வ­மாக வாழும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். அவ்­வா­றான அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூல­மாக நாங்கள் எல்­லோரும் ஒரு நாட்டு மக்­க­ளாக வாழ முடியும். நாம் இலங்­கையர் என்று பெரு­மை­யுடன் கூறி கொள்­வ­தற்கு நாம் விரும்­பு­கின்றோம். எமது மக்­களும் அதனை விரும்­பு­கின்­றனர்.

அந்த பய­ணத்தை நோக்­கியே நாம் நகர்ந்த வண்ணம் உள்ளோம். அந்த பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு நூற்­றுக்கு நூறு வீதம் நாம் ஆத­ரவு வழங்­குவோம். அதில் எந்­த­வொரு சந்­தே­கமும் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இது ஒரு புனி­த­மான பய­ண­மாகும்.அந்த பய­ணத்தில் வெற்றிக்கொள்ள வேண்டும். அந்த வெற்றியின் ஊடாக இந்த நாடு முன்னேர வேண்டும். பொருளாதார, கலாசார ரீதியாக முன்னேற வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பெளத்தர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து சுபிட்சம் அடைய வேண்டும். இந்த நாட்டின் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்பட வேண்டும் என பிராத்திக்கின்றேன் என்றார்.

Leave a comment