மாகாண முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமைய ஆளுனரை நியமிக்கும் யோசனை ஒன்று புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமையவின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆளுனர் என்பவர் மாகாணத்தை ஜனாதிபதியின் மாகாண பிரதிநிதியாவர்.
அவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின்; கீழ் உள்ளது.
எனினும் புதிய அரசியல் அமைப்பில் இந்த அதிகாரம் முதலமைச்சரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.
இதன் மூலம் வடக்கு பிரதேசம் ஈழநாடாக பிரிந்துசெல்ல பிரதமர் வழிசமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.