ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கடசிக்கு எந்த கொடுக்கல் வாங்களும் இல்லையென ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
ஜேவிபி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இடையில் தொடர்புகள் இருப்பதாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியனர் என்ன செய்கின்றனர் என்பதும், என்ன செய்தனர் என்பதும், ஜேவிபியினருக்கு என்ன செய்தனர் என்பதும் ஜேவிபி நன்கு அறியும்.
எனவே, ஐக்கிய தேசிய கட்சியுடனான தொடர்பு என்ன என்பது குறித்தும், ஜே விபி நன்கு அறியும்.
எனவே, ஐக்கிய தேசிய கட்சியுடனான ஜேவிபியின் தொடர்பு குறித்து எவரும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையில்லை என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.