இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 08 ஆண்டு சிறைத்தண்டனை

878 0

பாணந்துறை பிரதேசத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அதிபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 08 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் 25,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்வதற்காக 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி குறித்த பெண் அதிபர் இந்த இலஞ்சத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

Leave a comment