இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இடமளிக்க மாட்டார் – மஹிந்த அமரவீர

55356 0

நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜகத் ஜயசூரிய மட்டுமல்ல அனைத்து இராணுவத்தினரின் பாதுகாப்புக்காக அரசாங்கம் நிபந்தனைகளின்றி முன்னிற்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஜகத் ஜகசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என சரத் பொன்சேகா கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையிலேயே தமக்கு கருத்து வெளியிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, யுத்த வெற்றிக்காக போராடியவர்கள் பாதுகாக்கப்படுவார்களே தவிர, யுத்தம் என்ற போர்வையில் தவறிழைத்தவர்களை பாதுகாக்க தம்மால் முடியாது என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment