சிறி

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - July 8, 2016
மட்டக்களப்பு – காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் துவிச்சக்கரவண்டியும் வியாழக்கிழமை (ஜுலை 07, 2016) மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற ஆரையம்பதி பிரதேசத்தைச்…
மேலும்

ஈழத்தமிழ் அகதி படுகொலை? மூடி மறைத்த தமிழக காவல்துறை?

Posted by - July 7, 2016
ஈழத்திலிருந்து பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்திருந்த ஈழத்தமிழனான கந்தையா மோகனலக்ஸ்மன் என்ற இளைஞன் கடந்த (05.07.2016) கரும்புலி தினமான அன்று தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினரது கருத்துப்படி அவர் தற்கொலை செய்யுமளவில் எந்த காரணமும்…
மேலும்

நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்புக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முக்கிய இடம்!

Posted by - July 7, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு,…
மேலும்

முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை அபகரிக்கும் சிங்களம்!

Posted by - July 7, 2016
முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த கிராமத்திற்குள் நுழைவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் முல்லைத்தீவு மீனவ அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.இலங்கை இராணுவமும், அதற்குத் துணைபோகின்ற அதிகாரிகளும் நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக…
மேலும்

அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி)

Posted by - July 7, 2016
துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் நியாயமாக அங்காராவை பாதித்துள்ளமை யதார்த்தமானது.பிராந்திய அரசியல் மாற்றங்களை கையாள்வதற்கான அதன் இயலுமையை பாரியளவில் அவை வீழச்சியடையச்…
மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் நாம் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை -சிறிலங்கா

Posted by - July 7, 2016
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறுதியான நிலைப்பாடு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.கொழும்பில்…
மேலும்

2018ஆம் ஆண்டுக்குள் இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா விடுபட்டு விடும் – மங்கள சமரவீர

Posted by - July 7, 2016
2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,2018ஆம் ஆண்டுக்குள் இராணுவமய நீக்க செயல்முறைகள் நிறைவடைந்து…
மேலும்

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே- மக்ஸ்வெல் பரணகம

Posted by - July 7, 2016
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.சிறிலங்கா படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும்,…
மேலும்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கை!

Posted by - July 7, 2016
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர்கள் ரிசாத் பதியுதின், பைசர் முஸ்தபா ஆகியோரின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. “வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில்…
மேலும்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - July 7, 2016
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா மேற்படி உத்தரவினை இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.…
மேலும்