சமர்வீரன்

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற மே 18 , 2021 வணக்க நிகழ்வு.

Posted by - May 19, 2021
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் . வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப்…
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் யேர்மனி பிராங்பேர்ட் மாநகரில்  நினைவு கூரப்பட்டது.  

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நிறைவு நாள் பிராங்பேர்ட் மாநகரில்  இன்று (18.05.2020 ) நினைவு கூரப்பட்டது.  நகரின் மத்தியில்  ஒன்றிணைந்த தமிழ்மக்கள்   சிங்கள பௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளிற்கும் , தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
மேலும்

பிரான்சில் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற மே18 தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - May 19, 2021
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2021) செவ்வாய்க்கிழமை மழைக்கு…
மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Posted by - May 19, 2021
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2021…
மேலும்

பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மே 18 ,12ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ்…
மேலும்

எத்தனை எத்தனை உயிர்விலைகள்….றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - May 19, 2021
ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள் செல்விகள் சுஜானி குமரேஸ் மதுஷா றஞ்ஜித் ராசிகா ரவிக்குமார் சபிதா தவநேசன் ரோசிகா ரவிக்குமார் சுவேதா ஜெயக்குமார் சாகித்தியா விஜயகுமாரன் யனுசா உதயகுமார்
மேலும்

தமிழின அழிப்பு நினைவு நாள் MAY 18-பிரித்தாயா.

Posted by - May 19, 2021
12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக, இல 10 downing Street க்கு முன்பாக காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய…
மேலும்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள்.

Posted by - May 19, 2021
நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.தமிழீழ மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தமிழ் அமைப்புகள் நியூசிலாந்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள்…
மேலும்