நிலையவள்

66 கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது!

Posted by - November 17, 2024
கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  …
மேலும்

இன்று இலங்கை வரும் IMF குழு!

Posted by - November 17, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.…
மேலும்

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்!

Posted by - November 17, 2024
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்

Posted by - November 17, 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.   கடற்படை மரபுகளுக்கு அமைய கப்பலை வரவேற்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி,…
மேலும்

படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது!

Posted by - November 17, 2024
வெளிநாட்டில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான படோவிட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் இந்நாட்டிற்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் படோவிட அசங்கவின் உதவியாளர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ…
மேலும்

முறைகேடுகள் பல இடம்பெறும் அரச கட்டிடம்!

Posted by - November 17, 2024
பொரளை ருஹுனு கலா மாவத்தையில் கைவிடப்பட்ட அரச கட்டிடம் தற்போது பல்வேறு முறைகேடுகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பொரளை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக குறித்த அரச கட்டிடம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கிராம உத்தியோகத்தர் அலுவலகமாக…
மேலும்

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

Posted by - November 17, 2024
சர்வஜன கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீரவை நியமிக்க சர்வஜன அதிகாரத்தின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது. அத்துடன் குறித்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

Posted by - November 17, 2024
தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்றது.   இதன்போது…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்பு

Posted by - November 17, 2024
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தலொன்றை வெளியிட்டு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.   இதற்கமைய,…
மேலும்

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் வௌியீடு

Posted by - November 17, 2024
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பின்வருமாறு,   பிமல் நிரோஷன்…
மேலும்