நிலையவள்

தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிறந்த பொலிஸ் உத்தியோகத்தராகத் தேர்வு(காணொளி)

Posted by - November 10, 2016
கிளிநொச்சியில் சிறப்பு பொலிஸ் உத்தியோகத்தராக தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிசாரின் கடமைக்கான ஊக்குவிப்புப் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில்  கிளிநொச்சி  பொலிஸ்…
மேலும்

பழியுணர்வில் சிலர் நாட்டைச் சீரழிக்கின்றார்களாம்-மைத்திரி (காணொளி)

Posted by - November 10, 2016
நாட்டில் சிலர் பழியுணர்வையும் குரோதத்தையும் விதைத்து நாட்டை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் புகழ்பூத்த சமூக சேவையாளரான சர்வோதய இயக்கத்தின் நிறுவுனர் கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னவின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ராவத்தாவத்த, மொரட்டுவ…
மேலும்

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை(காணொளி)

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கான இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. கடந்த காலப் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட 30 பேருக்கு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் இலவச பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
மேலும்

வவுனியாவில் பண அட்டை மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது(காணொளி)

Posted by - November 10, 2016
வவுனியாவில் பணஅட்டை மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் இலங்கை வங்கியில் பனம் பெறும் இலத்திரனியல் இயந்திரத்தில் இரகசியமான முறையில் கமராவினைப் பொருத்தி வங்கி வாடிக்கையாளரின் இரகசிய கடவுச் சொல் மற்றும் பண அட்டையின் இலக்கங்களை பெற்று வங்கியின் வாடிக்கையாளர்களின்…
மேலும்

வடக்கு மீன்பிடி அமைச்சர் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் சந்திப்பு

Posted by - November 10, 2016
வட மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று மன்னாரில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரனின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்…
மேலும்

இந்தியாவிலிருந்து ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்-மீள்குடியேற்ற அமைச்சு

Posted by - November 10, 2016
இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் நாற்பத்தொரு இலங்கைத்தமிழ் அகதிகள் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 17ஆம் திகதி தென்னிந்தியாவின் திருச்சியில்…
மேலும்

டொனால்ட் ட்ரம்ப்பின் தெரிவு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது-ரில்வின் சில்வா

Posted by - November 10, 2016
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில்வின்…
மேலும்

வடக்கில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - November 10, 2016
யாழ் குடாநாட்டை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் ‘ஆவா கெங்ஸ்டர்’ என்றழைக்கப்படும் ஆயுதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு சிப்பாய் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் பிரிவின் விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்தில் சென்று கடந்த…
மேலும்

முல்லைத்தீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் சூறையாடுகிறது-சிவமோகன்

Posted by - November 10, 2016
முல்லைத்தீவில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் முடிவுகளை மீறி இராணுவம், மத்திய அரசாங்க அமைச்சரவையின் அனுமதியுடன் பொது மக்களின் காணிகளை சூறையாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி…
மேலும்

கரைச்சிப்பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு(காணொளி)

Posted by - November 9, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் பொதுநூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் பொதுநூலக நூலகர்…
மேலும்