நிலையவள்

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போயிருந்த நிலையில், நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக வீட்டில் சென்ற நிலையில், மாலையாகியும் வீடு…
மேலும்

நுவரெலியாவில் தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
  நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் எபோட்சிலி தோட்டம் மொன்டிபெயார் பிரிவில் 1000 ரூபாவை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் டயர்களை எரித்து, கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஆதரவை…
மேலும்

அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்-சுவாமிநாதன்

Posted by - October 12, 2016
  மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத…
மேலும்

இலங்கையில் பௌத்த மதத்திற்குரிய இடம் தொடர்ந்து பேணப்படும்-ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 12, 2016
ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ அல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…
மேலும்

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது. இக்கவனயீர்ப்புப் பேரணியானது யாழ்ப்பாணம் சத்திரச்சந்தியிலிருந்து ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியினூடாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தைச் சென்றடைந்தது. குறித்த…
மேலும்

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும்- யாழில் ஜ.நா அறிக்கையாளரிடம் சுட்டிக்காட்டிய குருகுலராசா(காணொளி)

Posted by - October 12, 2016
  சிறுபான்மை விவகாரங்களுக்கான ஜக்கிய நாடுகளின் அறிக்கையாளார் ரீட்டா ஜசக் தலைமையிலான குமுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ரீட்டா ஜசக் இன்று பிற்பகல் வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுல ராசா…
மேலும்

கிளிநொச்சியில் பெண்களை விழிப்புணர்வூட்ட வீதி நாடகங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்;பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம்…
மேலும்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்…
மேலும்

பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

Posted by - October 12, 2016
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அவரது பொறுப்புக்கள் அனைத்தும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் சம்மதத்துடன் இந்த அறிவிப்பை…
மேலும்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தீ

Posted by - October 12, 2016
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கோளாறே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செட்டிக்குளம் பொலிஸார், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து தீயை…
மேலும்