நிலையவள்

நாடு அந்நியர் கைகளுக்கு செல்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் -கலகொடத்தே ஞானசார தேரர் (காணொளி)

Posted by - December 30, 2016
புதிய அரசியல் யாப்பினால் நாடு பிளவடையப்போகின்றது அதனால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார். முகநூல் மூலமாக அனைவருக்கும் ஓர்…
மேலும்

மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதி சூழல் மாசடைகிறது (காணொளி)

Posted by - December 30, 2016
நுவரெலியா மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் சூழல் மாசடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் கொட்டப்படுகின்றது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும்…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

Posted by - December 30, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும், இன்றையதினம் யாழ்ப்பாண மேல்நீதிமன்ற பதில் நீதவான்…
மேலும்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்(காணொளி)

Posted by - December 30, 2016
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த பத்து வருட காலமாக தமது…
மேலும்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் குரல் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது

Posted by - December 29, 2016
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான குரல் பதிவொன்றை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தின்…
மேலும்

கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை

Posted by - December 29, 2016
கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் வீதியில்…
மேலும்

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Posted by - December 29, 2016
முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கனடா கிளையினரால் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இறுதி யுத்தத்தில் கணவனை இழந்த விதவை…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் – பத்மினி நாளிக்கா

Posted by - December 29, 2016
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் பிரசுரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பத்மினி நாளிக்கா தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்காக நான்கு கோடியே பத்து இலட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டதாகவும்,இதில் நான்கு கோடி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி…
மேலும்

டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 29, 2016
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 4242 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு…
மேலும்

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள  மாவில்லு வனப் பகுதி பாதுகாப்பிற்கான அழிக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவில்லு வனப் பகுதிக்கு வடக்கே 5425 ஏக்கர் வனம் காணப்படுவதாகவும், அதில் 750 ஏக்கர் வனம் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வனப் பகுதி எந்த வகையில் வேறு நபர்களுக்கு வழங்கப்படவில்லை…
மேலும்