நிலையவள்

ஜனாதிபதி செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு உரிய பதில் கிடைக்காது போனால், மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு – தபால் தொழிற்சங்களின் முன்னணி

Posted by - January 3, 2017
ஜனாதிபதி செயலகத்துக்கு தபால் சேவை ஊழியர்களினால் வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காது போனால், நாடு முழுவதிலுமுள்ள சகல தபால் நிலையங்களையும் மூடி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்களின் முன்னணி அறிவித்துள்ளது. தபால் சேவை…
மேலும்

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர்- பொதுபல சேனா

Posted by - January 3, 2017
  அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர் இருந்தமைக்கான சாட்சியங்கள் தம்வசம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. தமக்கு எதிராக செயற்படுகின்ற குழுவொன்றினாலேயே இந்த…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - January 3, 2017
நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு 7 மணியளவில் கையளிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டதாக நல்லிணக்கப் பொறிமுறை குறித்த…
மேலும்

பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரப்படும்- மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 3, 2017
  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தேர்தல்களை தொடர்ந்தும் காலதாமதப்படுத்துவதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி அறிவித்துள்ளது. அமைச்சர் பைஸர் முஸ்தபா மக்களின்…
மேலும்

இரு இராணுவ விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Posted by - January 3, 2017
சீன உற்பத்தியில் உருவான வை.20 ரக இரு இராணுவ  விமானங்களை புதிய வருடத்தில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராணுவ வீரர்களை ஏற்றிச் செல்வதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவ உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த விமானங்களை சீனாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கு…
மேலும்

வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல் கொண்டு செல்லப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
வவுனியா அரசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசி ஆலை களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியுள்ளனர். வவுனியா – பாவற்குளம் படிவம் 6 களஞ்சியசாலையிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட நெற் களஞ்சியசாலையிலிருந்து தென் பகுதிக்கு நெல்…
மேலும்

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை நியாயம் நிலை நாட்டப்படவில்லை- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

Posted by - January 3, 2017
  திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்த சம்பவமானது யுத்தக் காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்…
மேலும்

சிகரட் விலை7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்துள்ளது- ராஜித சேனாரத்ன

Posted by - January 3, 2017
சிகரட் விலை கடந்த ஒக்டோபர் மாதம் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பின் காரணமாகவே சிகரெட் பாவனை 40 சதவீதமாக குறைவடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - January 3, 2017
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று மதியம் 12 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் 2…
மேலும்

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
கிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் முன்னாள் போராளிகள், தாங்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில்…
மேலும்