நிலையவள்

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் மக்கள் எதிர்ப்பலைகளை மாத்திரமே உருவாக்குவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இந்த…
மேலும்

மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது- துமிந்த திஸாநாயக்க

Posted by - January 9, 2017
2020ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியான நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் தன்னால் ஒரு முறை மாத்திரமே…
மேலும்

பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை (காணொளி)

Posted by - January 9, 2017
பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்திற்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற கொள்கையில் முரண்பாடு ஏற்படுமாயின் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர்…
மேலும்

வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா (காணொளி)

Posted by - January 9, 2017
வடமாகாணத்தின் பாடசாலை உணவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் 2017 வருடாந்த ஆரம்பவிழா இன்று வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயாலயத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா கலந்து கொண்டதுடன், சிறப்பு…
மேலும்

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது (காணொளி)

Posted by - January 9, 2017
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் 1200 கிராம் கஞ்சாவுடன், நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆர்ப்படுத்தப்பட்ட நிலையில்,நீதிமன்று சந்தேக நபரை சம்பவம் தொடர்பில்…
மேலும்

கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - January 9, 2017
  அம்பாறை கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயள்வேத மத்திய மருந்தகத்தை, தற்காலிக கட்டடத்திற்கு இடமாற்றியமையைக் கண்டித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும்…
மேலும்

செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017
வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். குறித்த பாடசாலையில் 538இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர் என்றும், பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ்,…
மேலும்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுகின்றன

Posted by - January 9, 2017
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள், தடையின்றி இடம்பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் விசேட போக்குவர்த்து நடைமுறை கடந்த 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி விமான நிலையத்துக்கு வருகை…
மேலும்

ஹொரவப்பொத்தான பகுதியில் புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

Posted by - January 9, 2017
திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை உடைத்துச் செல்லும் காட்சிகள்,…
மேலும்

களுத்துறையில் தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

Posted by - January 9, 2017
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கடத்திச் செல்லப்பட்டார். கடத்திச் செல்லப்பட்டர் கொலன்னாவை பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.குறித்த நபர் களுத்துறைக்குச்…
மேலும்