நிலையவள்

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள்(காணொளி)

Posted by - November 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகளுடன் கார்த்திகை மலர் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62வது பிறந்ததின வாழ்த்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - November 25, 2016
வவுனியா மதவாச்சி பகுதியில் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. வவுனியா மதவாச்சியில்  2 ஆயிரத்து 634 ஜெலட்நைட் குச்சிகள், ஆயிரத்து 922 டெட்டநேட்டர்கள் மற்றும் வெடி மருந்து என்பவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி – இசின்பெஸ்கல பகுதியில் கற்குழியில் இருந்து…
மேலும்

யாழில் மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை-ரவிகரன் (காணொளி)

Posted by - November 25, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்குரிய விசேட நடமாடும் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நேற்றைய வடக்கு மாகாணசபையின் மாலை அமர்வின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்…
மேலும்

யாழ் குருநகரில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை

Posted by - November 25, 2016
யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி மதியம் படகொன்றில் நெடுந்தீவுக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குருநகர் மத்திய கிழக்கு வீதியைச் சேர்ந்த 44…
மேலும்

அவிசாவளை நூரி தோட்ட அதிகாரி கொலை-18 பேருக்கு மரணதண்டனை(காணொளி)

Posted by - November 25, 2016
அவிசாவளை – தெரணியாகலை நூரி தோட்ட அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 18 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி தேவி அபேரத்னவினால் இந்த தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டதாக எமது…
மேலும்

சட்டவிரோத துப்பாக்கிப் பாவனை அதிகரிப்பு-பாதுகாப்புத் தரப்பே பொறுப்பு

Posted by - November 25, 2016
நாட்டில் சட்டவிரோத துப்பாக்கி பாவனையால் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பாதுகாப்பு தரப்பு பொறுப்பு கூற வேண்டும் என்று முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். துப்பாக்கி தொடர்பில் அனுபவம் உள்ளவர்களாலேயே நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டால்…
மேலும்

போக்குவரத்துத் துறையினர் பணிப்பகிஸ்கரிப்பு-சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படலாம்

Posted by - November 25, 2016
தனியார் பேரூந்து பணிபகிஷ்கரிப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பணி பகிஷ்கரிப்பு காரணமாக, இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற தனியார் பேரூந்து…
மேலும்

ஆட்பதிவுத்திணைக்களத்தில் விலைமனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய நடவடிக்கை

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விலை மனுக்கோரல் மோசடி தொடர்பில் ஆராய்வதாக உள்விவகார அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள அடையாளஅட்டைக்கு பதிலாக அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள இலத்திரனியல் அடையாளஅட்டைக்கான புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த விலை மனுக் கோரலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.…
மேலும்

ரயிலில் பயணச்சீட்டின்றி பயணித்த 108 பேர் கைது

Posted by - November 25, 2016
ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று, இரண்டாவது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில், 108 பேரை, ரயல்வே பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். கைது…
மேலும்

விசேட தேவையுடைவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்-ஜனாதிபதி

Posted by - November 25, 2016
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி…
மேலும்