நிலையவள்

கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும், தேசிய தலைவரை வாழ்த்தி சுவரொட்டிகளும் (படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும்  வீதியோரங்களில் இன்று  காணப்படுகின்றது. நேற்று இரவு நேரம் விஸ்வமடுப்பகுதியில்  இனந்தெரியாத நபர்களினால் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது…
மேலும்

மட்டக்களப்பில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு (காணொளி)

Posted by - November 27, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கடந்த காலத்தில்…
மேலும்

கிளிநொச்சி கனகபுரம்  துயிலுமில்லத்தில்  கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது  மாவீரர் நாள்(படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு  மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக  அனுஸ்டித்தனர். கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக  நடத்தப்பட்டது.…
மேலும்

யாழ் குடாநாட்டு வீதிகளில் அதிகாலை ரயர்கள் எரிகப்பட்டன(காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் அதிகாலை 2மணிக்கு பின்னர் ரயர்கள் வீதியில்  எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பின்வீதி புன்னாலைக்கட்டுவன் சந்திப்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் சென்பற்றிக்ஸ் சந்தி  ஆகிய இடங்களிலேயே ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளாத பொலிசார் தெரிவிக்கின்றனர். புன்னாலைக்கட்டுவன் சந்தி மற்றும் யாழ்ப்பாணம்…
மேலும்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இரவிலும் பார்க்கலாம்

Posted by - November 26, 2016
தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவிலும் பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவு வேளையிலும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களை திறந்த வெளியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனவள…
மேலும்

மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்(காணொளி)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட பாடசாலை மற்றும் கோவிலுக்கு சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மேலும்

போரில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கம் தடுக்க முடியாது-மங்கள சமரவீர

Posted by - November 26, 2016
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கத்தினால்;கூட தடுத்து நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற போரில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரும் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இந்த…
மேலும்

தமிழரின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் மஹிந்த இப்போதும் ஜனாதிபதியே–வடக்கு முதல்வர்

Posted by - November 26, 2016
தம்மால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால், மஹிந்த ராஜபக்ஸ இன்றும் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சிங்கள ஊடகமொன்றில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்;. 2013ஆம் ஆண்டு…
மேலும்

விபத்துக்களின்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 26, 2016
போரினால் உயிரிழந்தவர்களை விடவும் சாலை விபத்துக்களால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த ஊடக…
மேலும்

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்-விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - November 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினர் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரம் காணிகளை மீளவும் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார். நேற்று பாராளுமன்றத்தில் 2017ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள்…
மேலும்