நிலையவள்

ஸ்ரீ ரங்காவும் சி.ஐ.டியில் முன்னிலை!

Posted by - November 20, 2024
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள சுஜீவ சேனசிங்கவின் V8 வாகனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
மேலும்

தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை நிறைவு

Posted by - November 20, 2024
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கு தேவையான வசதிகளை இலகுபடுத்தும் விதமாக, நேற்றும் (19) இன்றும் (20) பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.   இந்த நிகழ்வில் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற…
மேலும்

ஜுலம்பிட்டிய அமரேவின் மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

Posted by - November 20, 2024
தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உறுதி செய்தது. நீதிபதி பி. குமரன் ரத்னம் அவர்களின் ஒப்புதலுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன்…
மேலும்

அழுத்தமில்லாத கல்வியை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

Posted by - November 20, 2024
அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய  மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று (20)…
மேலும்

70,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அனுமதி

Posted by - November 20, 2024
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும்…
மேலும்

தேசிய பட்டியலில் ரவியின் பெயர் – மூவரடங்கிய குழு விசாரணை

Posted by - November 20, 2024
புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்கவை…
மேலும்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

Posted by - November 20, 2024
மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (20) அதிகாலையில் பெய்த கடும் மழையுடன் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன், மண்…
மேலும்

ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

Posted by - November 20, 2024
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்குமாறு…
மேலும்

ரயிலில் பயணித்த இளைஞன் சமிக்ஞை கம்பத்தில் மோதி பலி!

Posted by - November 19, 2024
ரயில் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (18) காலை, பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்   சென்ற விரைவு ரயிலில் பயணித்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.  …
மேலும்

விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் படுகொலை

Posted by - November 19, 2024
விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி அதன் உரிமையாளரைக் கொலை செய்துள்ளார். எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதகல பிரதேசத்தில் நேற்று (18) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. எல்பிட்டிய மேல் நவதகல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய…
மேலும்