தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொல்கொடை ஆற்றில் மிதந்த நிலையில், விமானப் படை சிப்பாயின் சடலமொன்று பாணந்துறை பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்த வாரம் தென்கொரியா பயணமாகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தென்கொரியா புறப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் வெகுசனத் தொடர்புத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹன லக் ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
இந்திய இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன், முள்ளிவாய்காலில் எனது மூன்றாவது மகனையும் இழந்துள்ளேன் என முல்லைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கான நல்லிணக்க ஆணைக்குழுமுன் ஒரு தந்தை முறையிட்டுள்ளதுடன் தனக்கு நீதி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இணங்கண்டு அதனை கட்டாயமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.
எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ் உதவி நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றிருக்கிறது.