கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 22 வாலிபர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் மாயமான வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிலர், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாக தெரிய வந்தது.
தன்னையும் அதிகாரிகள் கைது செய்து சிறையிலிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆகியோரது தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவம் உட்பட ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம வலியுறுத்துகின்றார்.
நாட்டைக் கட்டியெழுப்பவும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப் படைகளை காத்திரமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக சிவில் – இராணுவ ஒருங்கிணைப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.