பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலையின் அனைத்து பீடங்களையும் காலவரையின்றி மூடுவதாக பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ஆசிய பசிபிக் மிடில் வெயிட் தொழில்முறை குத்துச் சண்டை பட்டத்தை வென்றுள்ள இந்திய வீரர் விஜேந்தர் சிங், தன்னுடைய பட்டத்தை மறைந்த குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் புதிய பிரதமர் தெரசா மே மந்திரிசபையில், இந்திய வம்சாவளி பெண் பிரித்தி பட்டேல் (வயது 44), சர்வதேச வளர்ச்சித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
சிரியாவில் அதிபர் பாஷர்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிறீலங்கா கடற்படை சிறைபிடித்த 77 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
கொடைக்கானலில் மருத்துவர்களுக்கான முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அருகில் உள்ள வில்பட்டி கிராமத்துக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டார்.