பூமி வெப்பமயமாகி வருவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 5 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வெப்பத்தின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில் இன்று 56 பயணிகளுடன் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ், திடீரென்று சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின்மீது மோதியது. மோதிய வேகத்தில் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் பிரின்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் மின்னை சோமேகாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் மெஜாரிட்டியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது…
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல் இன்று (25) சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.
கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப்…