தென்னவள்

அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது

Posted by - June 25, 2016
வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும்

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது

Posted by - June 25, 2016
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சரவையில் மேலதிக அமைச்சர்களையும் இணைத்துக்கொள்ளப்போவதில்லை யெனவும் தெரிவித்துள்ளார்.தற்போது இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையைவிட ஒருவரேனும் அதிகரிக்கப்படக்கூடாது என்பதில்…
மேலும்

உலகின் சிறந்த தந்தை விருது

Posted by - June 24, 2016
அமெரிக்காவின் கான்கஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டா என்ற நகரில் ஜோஸ் மார்ஷல்(28) என்ற தந்தை கேப்ரியல் என்ற பெயருடைய தனது 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
மேலும்

ஊடகவியலாளரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ

Posted by - June 24, 2016
கால்பந்து வீரர் ரொனால்டோவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவருடைய மைக்கை பிடுங்கி அருகில் இருந்த குளத்துக்குள் வீசிய சம்பவம் சமூக வலைத்தளங்கில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

ஆர்ப்பாட்டத்தின் போது ரோஹித அபேகுணவர்தனவிற்கு விபத்து

Posted by - June 24, 2016
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தடையை மீறி முன்னோக்கி சென்ற…
மேலும்

பாடசாலையில்பிரத்தியேக வகுப்புகள் நடத்தினால் குற்றம்

Posted by - June 24, 2016
ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல்…
மேலும்

நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது -உயர் நீதிமன்றம்

Posted by - June 24, 2016
நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும்

சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை

Posted by - June 24, 2016
சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும்

விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு ஸ்காட்லாந்து தயார்

Posted by - June 24, 2016
பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார்.
மேலும்