தென்னவள்

வாகரையில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தம்

Posted by - June 26, 2016
மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

போர்க்குற்றவாளி கிரிசாந்த டி சில்வா மீண்டும் இராணுவத் தளபதி

Posted by - June 26, 2016
சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் கிரிசாந்த டி சில்வா பதவி வகிப்பார் எனத் தெரியவருந்துள்ளது. கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது சேவை நீடிப்பின் அடிப்படையிலேயே கிரிசாந்த டி சில்வா பணியாற்றி வருகின்றார்.
மேலும்

விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி

Posted by - June 26, 2016
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை தழுவியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
மேலும்

படகு ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்

Posted by - June 26, 2016
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற படகு இன்று ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலும்

அதிவேகத்தில் வெப்பமாக மாறும் பூமி

Posted by - June 26, 2016
பூமி வெப்பமயமாகி வருவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 5 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வெப்பத்தின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலி

Posted by - June 26, 2016
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும்

சீனாவில் பேருந்து வெடித்து சிதறிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்

Posted by - June 26, 2016
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹுனான் மாகாணத்தில் இன்று 56 பயணிகளுடன் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ், திடீரென்று சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவரின்மீது மோதியது. மோதிய வேகத்தில் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது.
மேலும்

பாப் பாடகர் பிரின்ஸ் கிதார் ரூ.1 கோடிக்கு ஏலம்

Posted by - June 26, 2016
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் பிரின்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் மின்னை சோமேகாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
மேலும்

மறுதேர்தல் நடத்த 15 லட்சம் பிரிட்டன் மக்கள் வலியுறுத்தல்

Posted by - June 25, 2016
ஐரோப்பிய யூனியனில் இருந்து  விலகுவது குறித்து பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் மெஜாரிட்டியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது…
மேலும்

‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு

Posted by - June 25, 2016
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல் இன்று (25) சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்