தென்னவள்

போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்

Posted by - July 1, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும்

காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 1, 2016
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருடன், மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், சிவனேசன், அன்ரனி…
மேலும்

மூவருக்கு 15 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை

Posted by - July 1, 2016
கந்தப்பளை, எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பைய்யா வனராஜா என்ற 45 வயது நபரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டு அவரை கத்தியால் குத்தியதுடன், அவரது உடலை லொறியால் ஏற்றிக் கொலை செய்த குற்றவாளிகள் மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க…
மேலும்

பல தொழிற் சங்கங்கள் இணைந்து திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம்

Posted by - July 1, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ள அடையாள வேலை நிறுத்தத்திற்கு மேலும் சில தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.
மேலும்

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - July 1, 2016
பாடசாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம் வழங்கியிருப்பதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

வாக்களித்த மக்களுக்கு நல்ல சேவைகளை செய்வேன் -தர்ஷிகா

Posted by - July 1, 2016
சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார்.
மேலும்

நேட்டோ கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும்-பாதுகாப்பு அமைச்சர்

Posted by - July 1, 2016
ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்படும் நேட்டோவின் புதிய நான்கு கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.  அடுத்தவாரம் போலாந்தில் நடைபெறவுள்ள நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இது…
மேலும்

குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை

Posted by - July 1, 2016
யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பாடசாலை நேரத்தில் போதை வஸ்து பாவனை குற்றச் செயல்களில் மாணவ்கள் ஈடுபடுவதாகவும் அத்தகைய…
மேலும்

என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்-அனந்தி

Posted by - July 1, 2016
யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு    முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று  வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
மேலும்

பிரதி ஆளுநர் நந்தலால் நியமிக்கப்படும் சாத்தியம்

Posted by - July 1, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக பிரதி ஆளுநர் பதவி வகிக்கும் கலா­நிதி நந்­தலால் வீர­சிங்க நிய­மிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அதே­வேளை மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் இலங்­கைக்­கான பிரிட்டன் உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.
மேலும்