ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த காலத்தில் பல்வேறு சீர்குலைப்பு செயற்பாடுகளில் கடும் போக்காளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ன கூறினாலும், வடக்கு – கிழக்கு மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின்