தென்னவள்

ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக அர்ஜூன மகேந்திரன்

Posted by - July 29, 2016
மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சிறீலங்காவில் நோயாளர் காவுவண்டிச் சேவை

Posted by - July 29, 2016
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையானது நேற்றையதினம் (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் காலிமுகத்திடலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்

தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்கள்

Posted by - July 29, 2016
தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும்…
மேலும்

பொருளாதார மத்திய நிலையம் நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்

Posted by - July 29, 2016
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமையவுள்ள நிலையில் எங்கு எவ்வாறான மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டுமென நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் கால்வாய் ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 28, 2016
கிளிநொச்சி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயதுடைய எம்.சண்முகம் என்ற நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

நாமல் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவு

Posted by - July 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 06 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று (28) கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும்

கல்லடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேர் காத்தான்குடி பொலிசாரால் கைது

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் பணத்திற்காய் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு (27.07.2016) காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜெயசீலன் தெரிவித்ததர்.
மேலும்

பாத யாத்திரை மாவனெல்லை – கனேதென்ன பிரதேசத்தில் முதல் நாளை நிறைவு செய்துகொண்டுள்ளது

Posted by - July 28, 2016
அரசாங்கத்துக்கு எதிராக, நடத்தப்படும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரை இன்று மாவனெல்லை பிரதேசத்தில் முதலாம் நாளை நிறைவு செய்துள்ளது.
மேலும்

கோட்டா இருந்தபோது சட்டம் தன் கடமையை செய்தது-கெமுனு புகழாரம்

Posted by - July 28, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்த போது ஸ்ரீலங்காவில் சட்டம் சீராக தன் கடமையை செய்தது என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன புகழாரம் கூறியுள்ளார்.
மேலும்

அரச நிதியை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை

Posted by - July 28, 2016
அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்