தென்னவள்

சசிகலா புஷ்பாவின் அசுர வளர்ச்சியும் அதிவேக வீழ்ச்சியும்

Posted by - August 2, 2016
குக்கிராமத்தில் பிறந்து அரசியலில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து பாராளுமன்ற உறுப்பினரான சசிகலா புஷ்பா தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளார்.தமிழகத்தின் தென்மூலையில் நெல்லை மாவட்டம் உவரி அடுத்துள்ள கரைசுத்து என்ற குக்கிராமம்தான் சசிகலா புஷ்பாவின் சொந்த ஊர். கிராமத்து மண்வாசனையோடு கணவர், குடும்பம்,…
மேலும்

10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ காரில் சோனியா பவனி

Posted by - August 2, 2016
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதியான வாரணாசி நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ காரில் ஊர்வலமாக சென்ற சோனியா காந்தி காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார்.
மேலும்

வைகை ஆற்றை சுத்தம் செய்யக்கோரி வழக்கு

Posted by - August 2, 2016
வைகை ஆற்றை சுத்தம் செய்யக் கோரிய வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வைகை ஆற்றை சுத்தம் செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர்…
மேலும்

டெங்கு நோய் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை முழுமையாக காப்பாற்றியவர் முதல்வர்

Posted by - August 2, 2016
தமிழ்நாட்டு மக்களை டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக காப்பாற்றியுள்ளார் என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்…
மேலும்

“ஆறிப்போன காயங்களின் வலி” புலத்தில் வெளியீடு

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அமைப்பின் முன்னாள்ப் போராளி வெற்றிச்செல்வி அவர்களால் வவுனியா பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பாக எழுதப்பட்ட “ஆறிப்போன காயங்களின் வலி” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரில் 30 – 07 –…
மேலும்

ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சனின் 9 ஆவது ஆண்டு நினைவுநாள்

Posted by - August 1, 2016
பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Posted by - August 1, 2016
வேலையற்ற பட்டதாரிகளை அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில்…
மேலும்

சன்னார் -இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் அவதி

Posted by - August 1, 2016
மன்னார் – மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் கிராமத்தில் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சியினால் ஏற்படும் அதிர்வுகளால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் 90 மில்லியன் ஊழல்? அரசாங்க அதிபரை விசாரிக்க வேண்டும்!

Posted by - August 1, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிவாரணப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 90 மில்லியன் ரூபாய் பணம் தேர்தலுக்காக பாவிக்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
மேலும்

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்குக

Posted by - August 1, 2016
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும்