வசிம் தாஜூடினின் கொலை இடம்பெற்ற போது அவரது வாகனத்தின் பின் இருக்கையில் சென்ற நபரை அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்ட தீர்மானமானது போரில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றுவதில் எந்த தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொல்வதற்கு பெருமைக்குரிய விடயம், ஆனால் உண்மையில் அது ஒரு நரக வாழ்க்கை, நடமாடும் நரக வாழ்க்கைதான் வெளிநாட்டு பயணம். என வெளிநாட்டு பயணத்தினால் பெரும் துன்பத்திலிருந்து மீண்டு வந்துள்ள பெண்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனத்திற்காகவும், பசும்பால் வழங்குவதற்கும் 5,185 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்குள் குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு செய்வதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.