தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கின்றோம் என்பதற்காக பேரவைக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்வது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.நேற்றுடன்(6) இது முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த கால எல்லை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பான வழக்கில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லிணக்க பொறிமுறை செயலணி மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என நாட்டின் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.