சிரியாவின் அலெப்போ மாநிலத்துக்கு உட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கொக்கோ உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டு ராணுவ மந்திரி சம்பள உயர்வு மற்றும் போனஸ் கேட்டு வீரர்களால் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடியவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன.
எதிர்கால பரம்பரைக்காக சங்கீத கல்லூரியை ஆரம்பிக்குமாறு அமரர் இசைமேதை கலாநிதி அமரதேவ மறைவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய சங்கீத கல்லூரியை நிர்மாணிப்பது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் வேறு எந்த நாடுகளோ, ஐக்கிய நாடுகள் சபை போன்ற வேறு எந்த சர்வதேச அமைப்புகளோ தலையிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சுத்தமான அம்பாந்தோட்டை பூமியை அசுத்தப்படுத்திய இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு புதிய சக்தியாக ஒன்றிணையுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களையும் தமிழையும் பாதிக்கின்ற செயற்பாடுகளிலும் அதனை அழிக்க வேண்டும் என்ற செயற்பாடுகளிலும் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சமஷ்டியே சிறந்த முறையென தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா, சமஷ்டி என்பது ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தாதென தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்து பாரிய கடன் சுமையை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் அவா என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.