பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கு முன்னைய தினமே கைது தொடர்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட கூறினார்.
சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் மாத்திரம் ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது என தேசிய நல்லிணக்கம் தொடர்பான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய கடல் பகுதியில் இரண்டு நாட்டு மீனவர்களும் கைதுசெய்யப்படும் நடவடிக்கைகளை தெரியப்படுத்துவதற்காக இரண்டு நாட்டு எல்லைப்படை வீரர்களும் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.