தென்னவள்

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை

Posted by - August 16, 2016
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களினூடாக, கஞ்சா கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுவதாக உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும்

கூட்டமைப்பின் தலைவரைத் தாக்கும் அளவிற்கு நானில்லை! அன்ரனி ஜெகநாதன்

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும்

வெடிகுண்டு பீதி: மலாக்காவில் விமானப் பயணம் தாமதம்!

Posted by - August 16, 2016
வெடிகுண்டு பீதி காரணமாக இங்குள்ள பத்து பெராண்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தோனிசியாவின் பெக்கான் பாருவுக்குப் புறப்படவிருந்த விமானம் இரண்டு மணிநேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட நேர்ந்தது.
மேலும்

சலாவ இராணுவ முகாமுக்கு அருகே மீண்டும் வெடிப்பு

Posted by - August 16, 2016
சலாவ மற்றும் கொஸ்கம ஆயுதக் களஞ்சியச்சாலை வெடித்துச் சிதறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சலாவ ஆயுதக்களஞ்சியசாலைக்கு அருகிலிருந்த வீட்டுத்தோட்டமொன்றில் மீண்டும் வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மேலும்

முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்படையினர் பயிற்சி

Posted by - August 16, 2016
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் காவல்துறையினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மக்களை கைவிட்டு செயற்படுகின்றனர்- சுரேஷ்

Posted by - August 16, 2016
பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்தும் பேணும் எண்ணத்திலேயே அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

மாத்தயா றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் – நீனா கோபால்

Posted by - August 16, 2016
விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை புதிய உலக சாதனை

Posted by - August 16, 2016
பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர்ரைக் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.அனிட்டா விலோடர்ரைக் 82.29 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். அவரது முந்தைய சாதனை 81.08 மீட்டராக இருந்தது.
மேலும்

மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் விஜயகாந்த்

Posted by - August 16, 2016
தே.மு.தி.க, தலைவா விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தே.மு.தி.க கூட்டணி அமைத்து 104 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது.
மேலும்

இன்று சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி

Posted by - August 16, 2016
இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும்