களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம் தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக் கொள்ள தயாராக உள்ளதாக, ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் ஹெடிகல்லே விமலசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா…
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தான் எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் என, கருதுவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அதனாலேயே முப்பது வருட யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வழங்குமாறு இளைஞர் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார் ஒன்றிணைந்து கறுப்புக் கொடியணிந்து அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.