சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பெரும்பாலான இராணுவம் மீட்டு உள்ள நிலையில ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புக்களும் நம்பியிருக்க, அதனை தவிடுபொடியாக்கிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார்.
ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே நாளைய ஆர்.கே. நகர் நிகழ்ச்சியை அவர் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில மாதங்களில் ஐந்து இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்கள் இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்வைப்பது குறித்து விஷேட வேலைத் திட்டத்தை செயற்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.