ஜெர்மனி நாட்டில் உள்ள ஹெய்டல்பர்க் நகரில் சாலையோரமாக நடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடிய கார் புகுந்த விபத்தில் 73 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போயஸ்கார்டன் வீட்டை கபளீகரம் செய்த டி.டி.வி. தினகரன் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் பற்றி அறிக்கை விட எந்தத் தகுதியுமே இல்லாதவர் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவை ஆட்சியாளர்கள், ஆட்சி செய்தவர்கள் மக்களை சந்திக்கவே பயப்படுகிறார்கள். அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மாநிலங்களவையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து வலியுறுத்துவேன் என இல.கணேசன் எம்.பி. கூறினார்.
இந்தியாவிற்கு எதிராக ஒருபோதும் இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதேச, நகர, மாநகர சபைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறை, இந்நாட்டில் வாழும் மிகப்பெரும்பான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடும்.
தலைக்கவசம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.