தென்னவள்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - November 20, 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும்,  எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன், ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.
மேலும்

வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் – கமால் குணரத்ன

Posted by - November 20, 2016
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு!

Posted by - November 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை இன்று சாவகச்சேரி பிரதேச சபைக் கட்டத்திற்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும்

Posted by - November 20, 2016
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டுள்ளதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும். தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகையில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர தூது : ‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஆதரவு பிரசாரம்

Posted by - November 20, 2016
மீண்டும், அ.தி.மு.க.,வில் சேரும் முயற்சியில், ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா இறங்கியுள்ளதாக தெரிகிறது. நான்கு தொகுதி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கும்படி, அவர், ‘வாட்ஸ் ஆப்’ வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

திமுக.,வினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Posted by - November 20, 2016
நவம்பர் 24ம் தேதி திமுக நடத்த உள்ள மனிதசங்கிலி போராட்டம் குறித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

தமிழகம் முழுவதும் 22-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - November 20, 2016
இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இந்து ஒற்றுமை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வேலூர் ஜெயிலில் நளினி – முருகன் சந்திப்பு

Posted by - November 20, 2016
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று(19) காலை நளினையை முருகன் சந்தித்து பேசினார்.
மேலும்