யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த தேர்தலை யாரும் ஒரு வட்டாரத்துக்கான தேர்தலாக பார்க்கக்கூடாது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்துக்கான தேர்தலாக பார்க்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலில்…
வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
காலி – அஹுங்கல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த 10 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடியதாக கூறப்படும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அஹுங்கல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத இரண்டு நபர்களால் தேசபந்து தென்னக்கோனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 01 ஆம் திகதி) 3,998 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…