ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்துரை செய்ய வேண்டும். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று 16-வது நிதி ஆணைய குழுவிடம் முதல்வர் ஸ்டாலின்…
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்.
க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழ்வேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேரின் நூல் களை நாட்டுடைமையாக்கி. அவர்களின் வாரிசுகளுக்கு நூல் உரிமைத் தொகையான ரூ.90 லட்சத்தை தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்,, திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் வாயிலாக 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,078 ஆகும்.
வெளிவிவகாரம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.