சுகாதார அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயார் என முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை (21) பகல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீனவர்கள், கடலில் மிதந்து வந்த பொதியொன்றை சோதனையிட்டபோது அப்பொதி வெடித்துள்ளது.
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (22) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று (21) தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் உள்ள வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை …
நாட்டின் மேன்மை பொருந்திய தாபனமான பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை இயலுமான வகையில் பாதுகாப்பதுடன், அனைத்து உறுப்பினர்களினதும் உரிமைகளை பாதுகாத்து மிகவும் பொறுப்பு மிக்க சபாநாயகர் பதவியின் கடமைகளை நேர்மையான முறையில் நிறைவேற்றுவேன் என சபாநாயகர் அசோக ரன்வல சபைக்கு உறுதியளித்தார்.
தேசிய பட்டியல் விவகாரத்தை பிரச்சினைக்குரியதாக நாம் கருதவில்லை. புரிந்துணர்வுடன் இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும். தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க முடியாது என நான் கூறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டி, தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹரகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகயீனமுற்று 9 சிறுமிகள் இன்று வியாழக்கிழமை (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.